முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் ராஜ்ய சபையில் மனோகர் பாரிக்கர் பேச்சு : பிரதமர் மோடி பாராட்டு

வியாழக்கிழமை, 5 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி -  அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ராஜ்ய சபையில் ஆற்றிய உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இத்தாலியை சேர்ந்த பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனம் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் . இந்த நிறுவனத்தில் இருந்து விவி.ஐ.பிக்கள் பயணம் செய்வதற்காக 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்தது.

ரூ3ஆயிரத்து 600 கோடிக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் நிறைவேறியபோது  ஒப்பந்தம் பெற்ற நிறுவனம்  பல கோடி ரூபாயை இந்திய தலைவர்களுக்கு லஞ்சம் அளித்த தகவல் இத்தாலி கோர்ட் விசாரணையில் தெரிய வந்தது. இந்த  ஊழல் வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி குறிப்பாக அதன் தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதுதான் ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தம் நடைபெற்றது. இந்த  ஒப்பந்தம் நடந்த போது இந்திய விமானப்படையின் தளபதியாக எஸ்.பி.தியாகி இருந்தார். தற்போது அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ராஜ்ய சபையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஊழல் விவகாரம் குறித்த உண்மைகளை தெரிவித்தார். அவரதுபேச்சை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டினார்.

 அவரது பேச்சை ஆதரவாளர்கள் கேட்க வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நடந்த சர்ச் சைக்குரிய ஹெலிகாப்டர் ஊழல் குறித்து ஆதாரங்களுடன் மனோகர் பாரிக்கர் பேசினார். அந்த ஊழல் குறித்து விசாரணை நடக்காமல் தடுக்க கண்ணுக்கு தெரியாத நபர் செயல்பட்டார் என்றும் மனோகர் பாரிக்கர் ராஜ்ய சபையில் குற்றம் சாட்டினார். அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் குறித்து தற்போது இத்தாலி கோர்ட்டில் கூறப்பட்டுள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் மனோகர் பாரிக்கர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்