முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவின் அலெப்போ நகரில் தீவிரவாதிகளின் பிடியிலிருந்த 4 ஆயிரம் பொதுமக்களை ராணுவம் விடுவித்தது

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்  - சிரியாவின் அலெப்போ நகரில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் மற்றும் சிரியா இராணுவத்தினர் இணைந்து நடத்திய தாக்குதலில், 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், மேலும் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து அலெப்போ நகரில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, இதுகுறித்து அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளதாவது, தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், அதே சமயத்தில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்பதனையும் கருத்தில் கொண்டுள்ளோம். இதுவரை நடைபெற்ற தாக்குதலில் சுமார் 4,000 மக்கள் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜெனிவாவில் நடைபெற்ற சந்திப்பின்போது, ஐநா செயலாளர் ஜான் கெர்ரி மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜியி லவரோவ்  ஆகிய இருவரும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவது குறித்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த ஒப்பந்தம் அடிப்படையில் 5 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மோதல் தீர்வுக்கு வரும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், அலெப்போ நகர் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தில் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். மேலும், நரகத்தில் இருந்து எங்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது, சுதந்திரம் வாங்கிகொடுத்து இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சிறுவர்களும் விடுதலை கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தில், இராணுவ வீரர்களை நோக்கி ஓடிவந்து அவர்கள் கரங்களை பற்றி நன்றி தெரிவிக்கும் புகைப்படம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்