முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா திட்ட முகாம்கள்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுக்கா அங்கம்பாக்கம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் வாலாஜாபாத் வாட்டாட்சியர் கீதாலட்சுமி தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரராஜன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டாட்சியர் கலைமணி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 92, மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 18 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 20 மனுக்கள் நிலுவை உள்ளது, 54 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர்கள் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர். இதேப் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா மணல்மேடு கிராமத்தில் நேற்று அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வாட்டாட்சியர் சாந்தி, சமூகபாதுகாப்பு திட்ட அலுவலர் அகிலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டாட்சியர் லோகநாதன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 57 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 16 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 37 மனுக்கள் நிலுவை உள்ளது. 04 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் சண்முகப்பிரியா உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்,

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்