முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      இந்தியா
Election-Commission 2024-03

Source: provided

புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பொதுநல மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.இதையடுத்து, இந்த மனு தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைக்கு பட்டியலிடுவார் என்றும் சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ள நிறுவனங்களின் நிதி ஆதாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் இப்பத்திரங்கள் விநியோகம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கவும், அதனை தேர்தல் ஆணையம், தனது வலைதளத்தில் வெளியிடவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து