முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் “திறந்தவெளியில் மலம் கழித்தல் பழக்கம் இல்லாத ஊராட்சிகளாக” மாற்ற நடவடிக்கை : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2016-17ம் ஆண்டில் "திறந்தவெளியில் மலம் கழித்தல் பழக்கம் இல்லாத ஊராட்சிகள்" ஆக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் பல்வேறு துறையினருக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

 

முதன்மை செயலர்

 

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது...ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச்செயலர் அவர்களின் அறிவுரையின்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊராட்சிகளை முழுமையாக "திறந்தவெளியில் மலம் கழித்தல் பழக்கம் இல்லாத ஊராட்சிகள்" ஆக மாற்றிடவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊராட்சிகள் முழுமையாக சுகாதார நிலையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.

 

விழிப்புணர்வு

 

பள்ளி , கல்லூரிகளில் மாணவர்களிடயே திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவைகள் எடுத்துரைக்க வேண்டும்.அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு தனிநபர் இல்லக் கழிவறை குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் அன்றாடம் வரும் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளிடம் தனிநபர்க்கழிவறை அவசியம் குறித்து எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் ஒவ்வொரு துறையினரும் பங்களிப்பு செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படு;த்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் செல்வராஜ், திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.அழகு மீனாட்சிசுந்தரம், துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) செந்தில்குமார், முதன்மைக்கல்வி அலுவலர் பார்வதி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சோழன், உதவி திட்ட அலுவலர் (சுகாதரம்) கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்