எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - சசிகலா தமிழக முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்திருக்கிறார். சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
சட்டச்சிக்கல் இல்லை :
இந்நிலையில், சசிகலாவுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்துவைப்பது குறித்து ஆளுநர் வித்யாசாக ராவ் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம் ஆலோசனை கேட்டதாக தகவல்கள் வெளியாகின.இதனை, முகுல் ரோத்தகி திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்னிடம் எவ்வித சட்ட ஆலோசனையும் பெறவில்லை. அதேவேளையில், சசிகலா முதல்வராக வேண்டும் என அவரது கட்சியினர் கூடி முடிவு எடுத்துள்ளனர். சசிகலா முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை" என்றார்.
வெங்கையா நாயுடு பேட்டி :
இந்தநிலையி்ல் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர் தமிழக கவர்னர் எல்லா அம்சங்களையும் ஆய்வு செய்து வருகிறார். அரசியல் சட்டப்படி உரியநடவடிக்கையை அவர் எடுப்பார். இதில் மத்திய அரசின் பங்கு ஏதுமில்லை என்று கூறினார். பா.ஜ.க. பின்னனியில் உள்ளது என்று கூறப்படும் குற்றச்சாட்டை முதல்வர் பன்னீர்செல்வம் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025