முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.57 ஆயிரத்தை எட்டியது ஒரு சவரன் தங்கம் விலை

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, ரூ.57 ஆயிரத்தை எட்டியுள்ளது ஒரு சவரன் தங்கம் விலை.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரும்பாலும் குறைந்தே விற்பனையானது. வார தொடக்கத்தில் ரூ.57,120-க்கு விற்பனையான சவரன் விலை வார இறுதியில் ரூ.56,800-க்கு விற்பனையானது. பெரிய அளவில் விலை உயர்வு இல்லாததால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் சவரனுக்கு ரூ.56,800-க்கும், செவ்வாய் கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து சவரன் ரூ.56,720-க்கும் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்துக்கும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,125-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனையானது. 

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம் வருமாறு., 25-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800, 24-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720, 23-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800, 22-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800, 21-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800-க்கும் விற்பனையானது. கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம் வருமாறு., 25-12-2024- ஒரு கிராம் ரூ. 99, 24-12-2024- ஒரு கிராம் ரூ. 99, 23-12-2024- ஒரு கிராம் ரூ. 99, 22-12-2024- ஒரு கிராம் ரூ. 99, 21-12-2024- ஒரு கிராம் ரூ. 99-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து