முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம்.

விழுப்புரம் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில், மேல்மலையனூர் வட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர்இல.சுப்பிரமணியன்  தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குடிநீர் வசதிகளும் மற்றும் சாலைகளில் மின்விளக்கு வசதிகள் செய்து தரவும், போக்குவரத்துத் துறை மூலம் சிறப்பு பேருந்துகள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து பொதுமக்கள் வசதியாக வந்து செல்வதற்கு போக்குவரத்துத்துறையை சார்ந்த அலுவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.மேலும், முழு சுகாதார திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கழிவறை, குளியலறை வசதிகள் மற்றும் குப்பைத் தொட்டிகள் ஏற்படுத்த வேண்டும்.  மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்யவும், விழாக்காலங்களில் 13 நாட்களிலும் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்கவும், பழுதடைந்துள்ள சாலை மின்விளக்குகள் அனைத்தையும் சரி செய்திட வேண்டுமெனவும்,  இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்திடவும், மாசி திருவிழாவில் திருக்கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலைங்களில் சி.சி.டிவி மூலம் கண்காணிக்கப்பட்டு பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் உத்தரவிட்டார்.மேலும், சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழு மற்றும் அவசர ஊர்திகள் திருக்கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.  குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்க வேண்டும்.  காவல்துறை சார்பாக திருவிழா நாட்களில் அதிகப்படியான காவலர்களை பணி அமர்த்தவும், திருக்கோவில் வளாகம், தெருக்கள் மற்றும் ஊரின் சுற்றுப்புறங்களில் திருட்டு சம்பவம் ஏற்படாமல் தடுக்கவும் மற்றும் பெரிய ஏரி, அக்கினி குளம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் காவலர்களையும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரையும் பணியில் நியமிக்க வேண்டுமெனவும் கலெக்டர்இல.சுப்பிரமணியன்  அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு, விழுப்புரம் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சவுண்டம்மாள், காவல் ஆய்வாளர்கள், வட்டார வளர்ச்சி, போக்குவரத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்