முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் இணைப்பில் முறைகேடு- 3 மின் மோட்டார்கள் பறிமுதல்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து நீர் உறிஞ்சி குடிநீரை வீணாக்கியதற்காக 3 வீடுகளில் மின் மோட்டாரகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 குடிநீர் இணைப்பு

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிக்கும் மக்களின் வசதிக்காக அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் குடிநீர் இணைப்பில் மின்மோட்டார்களை வைத்து குடநீரை உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பேரூராட்சி செயல் அலுவலர் ரவி உத்தரவிட்டு இருந்தார்.
இதன் பேரில் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் புதன்கிழமை கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 3 வீடுகளில் முறைகேடாக போடப்பட்டு இருந்த மின்மோட்டார்களை பறிமுதல் செய்ததோடு, அந்த வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டித்தனர், இந்த நடவடிக்கை தொடரும் என்பதால் மின்மோட்டார்களா வைத்து தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மின்மோட்டார்களை அவர்களாகவே அகற்றிட வேண்டும் என பேரூராட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்