முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை பெய்யவும் வேண்டி கோவில்களில் யாகங்கள்: வருண பூஜையில் அமைச்சர்கள் பங்கேற்பு

திங்கட்கிழமை, 22 மே 2017      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும், விவசாயம் செழிக்கவும், மழை பெய்யவும் வேண்டி கோவில்களில் யாகங்கள் நடைப்பெற்றன. இந்த வருண பூஜையில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பு யாகம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் மழை வேண்டி நேற்று கோயில்களில் சிறப்பு யாகம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வர் கோயில் மற்றும் பெசண்ட் நகர் அஷ்ட்லட்சுமி திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சிறப்பு யாகத்தில் மஹாசங்கல்பம், காலை 7.30 மணிக்கு வர்ஜன்ய சாந்தி ஜெபம், நாலாயிர திவ்விய பிரபந்த்த்தில் வருண ஜெபம், யஜூர் வேத பாராயணம், ஆகியவையும் காலை 8.30 மணிக்கு மஹா வருண ஹோமம், வேள்வி, காலை 9.30 மணிக்கு மஹா பூர்ணாஹீதி, ஆகியவை நடைபெற்றது. இந்த சிறப்பு யாகத்தில் தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் எம்.எல்.ஏவுமான விருகை ரவி. அதிமுக எம்.பி. ஜெயவர்தன், அஷ்ட் லட்சுமி கோயிலின் செயல் அலுவலர் மதனகோபால், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு வழிபாடு

இது குறித்து விருகை ரவி நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் வறட்சியின் காரணமாக சில மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பருவ மழை போதுமான அளவுக்கு பெய்யாததே குடிநீர் தட்டுப்பாட்டுக்கும் வறட்சிக்கும் காரணமாகும், எனவே திருக்கோயில்களில் மழை வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.

மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை நகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ ஏற்பாட்டில் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் பொற்றாமரை குளத்தில் வர்ண ஜெப பூஜை நடைப்பெற்றது. முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து பின் 25-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து பூஜை நடத்தினர்.
இதையடுத்து புனித நீர் அடங்கிய கலசங்களை பொற்றாமரைக் குளத்தில் ஊற்றி வருண ஜெப பூஜை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ, நகர மாவட்ட அவை தலைவர் புதூர் துரைபாண்டியன், துணைச் செயலாளர் தங்கம், பொருளாளர் ராஜா, எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன், முன்னாள் மேயர் திரவியம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருமோகூர் பெருமாள் கோவில்

மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோலிவில் வருண ஜெபபூஜை நடைப்பெற்றது. கொடிமரம் அரகே 11 அர்ச்சகர்கள் பங்கேற்று கஜபூஜை புண்ணியதானம் செய்து கலசத்தில் வர்ண பகவானை ஆவாகனம் ஜெபம் செய்தபின் அந்த கலச நீரை கோவிலில் பின்புறம் உள்ள குளத்தில் சிறப்பு பூஜை செய்தனர். பின் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை புறநகர் மாவட்ட ஜெயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ செய்து இருந்தார்.

அமைச்சர் அன்பழகன்

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில் உள்ள, தீர்த்தகீரிஸ்வர் திருக்கோயிலில், மழை வேண்டி அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில், சிறப்பு யாகம், பூஜை நடந்தது. இதில் விநாயகர், அம்மன், சிவபெருமாள் ஆகியோருக்கு, சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. பின்பு நந்தீஸ்வரரை சுற்றி சுவர் கட்டி, அதில் தண்ணீர் நிரப்பி, சிறப்பு யாகம், பூஜை செய்து வழிப்பட்டனர். அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை பேரூர் பட்டீஸ்வரர்

கோவை மாவட்டம் பட்டீஸ்வரர் கோயிலில், இந்து சமய அறநிலைய துறை சார்பில், மழைவேண்டி சிறப்பு யாகம் நடைப்பெற்றது. சிறப்பு வழிப்பாட்டில்  எம்.எல்.ஏக்கள், சமூக ஆர்வரலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வீரபாண்டி கவுமாரியம்மன்

தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பில் வீரபாண்டி கவுமாரியம்மன் திருக்கோவிலில் 5 விதமான சிறப்பு யாகங்கள், பூஜைகள் செய்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் செய்திருந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள கஜலட்சுமி சன்னதி முன்பு மழை வேண்டி சட்டமன்ற தலைமையில் சிறப்பு யாகம் நடைப்பெற்து. யாகத்தில் யூனியன் தலைவர் காளிமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மழைவேண்டி நடைபெற்ற சிறப்பு வருண பூஜையில் அமைச்சர் மணிகண்டன், அ.தி.மு.க மாவட்ட ஜெயலாளர் எம்.ஏ. முனியசாமி, முத்தையா எம்.எல்.ஏ, நகர செயலாளர் பெருமாள், கோவில் இணை ஆணையர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்