முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரானுக்கு அமெரிக்க புதிய நிபந்தனைகள்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் புதிய நிபந்தனைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன.  அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்து வந்தார். தற்போது அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.  இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர்மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது: ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது. அதேநேரம் அந்த நாடு ஒப்பந்தத்தை எந்த அளவுக்கு உண்மையாக நிறைவேற்றி வருகிறது என்பதை ஆய்வு செய்வோம்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்படும். என்னென்ன நிபந்தனைகள் என்பதை இப்போது பகிரங்கமாக வெளியிட முடியாது.

இவ்வாறு அந்த அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவித் ஜாரீப், ஐ.நா. கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முகாமிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

அணுஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடவில்லை. இதனை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மீது புதிய நிபந்தனை, கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மாறி, மாறி பேசுகிறது. அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து