முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      தமிழகம்
rain 2023-05-25

சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்துவரும் நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழையும் பெய்துள்ளது.

அதன்படி, கடந்த மார்ச் 01-ம் தேதி முதல் ஏப்ரல் 26 வரையிலான காலகட்டத்தில் அரியலூரில் 1.9 மி.மீ மழையும், திண்டுக்கல்லில் 12.7 மி.மீ, ஈரோட்டில் 4.5 ஆகவும், கன்னியாகுமரியில் 55.5 ஆகவும், காரைக்காலில் 2.0 ஆகவும், மதுரையில் 16.8 ஆகவும், நாகப்பட்டினத்தில் 17.0 ஆகவும், அதிகபட்சமாக நீலகிரியில் 30.7 மி.மீட்டரும், நெல்லையில் 69.7 ஆகவும் தமிழகம் மற்றும் புதுவையில் 9.4 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.

பொதுவாக கோடைக்கால பருவமழை இயல்பான அளவு 53.3 மி.மீ பதிவாக வேண்டிய நிலையில் 9.4 மி.மீ அளவிலான மழையே பதிவாகியுள்ளது. இது இயல்பிலிருந்து 83 சதவீத மழை குறைவாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து