முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      இந்தியா
Hemant-Soran 2023-07-23

Source: provided

புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

முன்னதாக ஹேமந்த் சோரனின் மாமா, ராஜா ராம் சோரன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள13 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ராஜா ராம் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஷிபு சோரனின் மூத்த சகோதரர் ஆவார்.

நில மோசடியுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது. முன்னதாக, அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். அவரது கட்சியின் மூத்த தலைவர் சம்பய் சோரன் ஜார்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்றார். முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின் பேரில், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இதுவரை தீர்ப்பை வழங்காததைத் தொடர்ந்து, ஹேமந்த் சோரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்த்தில் அண்மையில் முறையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து