எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி:-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் சார்பில், தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 24-வது ஆண்டு அமர்வின் மூன்று நாள் மாநாட்டின் நிறைவு விழா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டியார் நினைவு கலையரங்கில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில் ஒவ்வொருவரும் வரலாற்று உணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலம் மனித பண்பாட்டு வரலாற்றை நல்ல முறையில் அறிந்துகொள்ளவதுடன் நமது ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் என்றார். பல்வேறு மாநிலங்கள், தேசங்கள், மற்றும் உலக வரலாறுகளை படிப்பதன்; மூலம் மன்னர்கள் எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பதையும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றியும் அதற்கு எவ்வாறு தீர்வு கண்டார்கள் என்பதையும் அறிந்துகொள்ளவதோடு மக்களுiடைய நலனுக்கு என்னவெல்லாம் செய்தார்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
இன்றைய இளைய சமூதாயத்தினர் வரலாற்றை முறையாக படிப்பதன் மூலம் அவர்கள் ஒரு சிக்கலான சூழலில் சரியான மற்றும் தைரியமான முடிவுகளை எடுப்பதற்கு வரலாற்று அறிவு பெரிதும் உதவும் என்றார். இன்றைய சூழலில் மாணவர்கள் தேசிய மற்றும் உலக வரலாறு பற்றிய தெளிவான அறிவை பெற்றிருந்த போதிலும் தத்தம் பகுதியைச் சேர்ந்த வரலாற்று முக்கியத்துவங்களை அவர்கள் சரிவர தெரிந்திருக்கவில்லை. எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தத்தம் பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு முதலில் கற்றுத்தர வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வரலாற்று பாடத்தின் முக்கியத்துவம் பற்றியும் வரலாற்றில் சிறப்பு பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை கோடிட்டு காட்டி அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திரு. எஸ்.முத்தையா, வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளர், நிறைவு விழா பேருரையாற்றினார். அவர்தம் பேருரையில் வரலாறு என்பது அனைவரும் ஆர்வத்துடன் படிக்கக் கூடிய பாடமாகும். வரலாறு படிக்கும் மாணவர்களிடம் வரலாற்றை பாடப்புத்தகங்களில் உள்ள செய்தியாக மட்டும கற்பிக்காமல் அதனை ஒரு கதை வடிவில் கற்பிப்பதன் மூலம் அவர்களிடையே ஒரு ஆர்வத்தை உருவாக்க முடியும் என்றார். அவர் மேலும் பேசுகையில் வரலாறு, புவியியல், குடிமையியல், சுற்றுப்புறவியல் இவை நான்கும் தனித்தனிப் பாடங்களாக 3ஆம் வகுப்பு முதல் கற்றுத் தரவேண்டும். அதோடு அந்தந்த பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவத்துவத்தையும் கற்றுத்தருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒரு வரலாறு எனவே ஒரு மனிதன் குறைந்தது ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி தினந்தோறும் எழுத வேண்டும். அது வெளியீட்டிற்காக அல்ல. அது தன்னுடைய குழந்தைகள், மற்றும் சந்ததியினர் தங்களது முன்னோர்கள் எந்த சூழ்நிலைகளில் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிய உதவும் என்றார்.
அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் தனது வாழ்த்துரையில் வரலாற்றை படிக்கும் மாணவர்களுக்கு எந்தெந்த துறைகளிலெல்லாம் வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன என்பதை விளக்கமாக விவரித்தார். குறிப்பாக அருங்காட்சியகத் துறை, தொல்லியல் துறை, புராதான சின்னங்களைப் பாதுகாக்கும் துறை, இதுபோன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றார். எனவே வரலாறுபடிக்கும் மாணவர்கள் சீரிய முறையிலும் ஆர்வத்துடனும் ஆழமாகவும் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொடைக்கானல் மதர்தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜானகி, முனைவர் என்.ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் கருணாநந்தம், தலைவர், வரலாற்றுப் பேரவை, மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஜெகதீசன், ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக வரலாற்றுத் துறை பேராசிரியர் (பொ) முனைவர் கே.கிரு~;ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். முனைவர் ஜி.பரந்தாமன் உதவிப் பேராசிரியர் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025