முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

110 வது தேவர் ஜெயந்தி மற்றும் 55 வது தேவர் குருபூஜை தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.- 110 வது தேவர் ஜெயந்தி மற்றும் 55வது தேவர் குருபூஜை(28.10.17, 29.10.17 மற்றும் 30.10.17 ஆகிய தேதிகளில்) நடைபெறுவதை முன்னிட்டு  கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த சமுதாயத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்  சி.முத்துகுமரன்   தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராசராசன்.இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில்   நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  சி.முத்துகுமரன் அவர்கள் அவர்கள் தெரிவித்ததாவது.,
110 வது தேவர் ஜெயந்தி, மற்றும் 55வது குருபூஜையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக இயக்குவது குறித்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பின்வரும் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்திலிருந்து பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில், காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில், உரிய வாகன ஆவணங்களை அளித்து அனுமதி பெற்று, அனுமதி சீட்டினை வாகனங்களின் முன்புற கண்ணாடியில் ஒட்டிச்செல்லவேண்டும்.
  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். வாடகை வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், லாரி, டிராக்டர், சைக்கிள், மற்றும் திறந்த வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. நடைபயனமாக செல்ல அனுமதி இல்லை. வாகனத்தில் ஆயுதங்கள், பட்டாசுகள், மதுபானங்கள் எடுத்துச் செல்ல கூடாது. வாகனங்களில் ஒலி பெருக்கி பொருத்திக் கொள்ள அனுமதி இல்லை. வாகனங்களில் செல்பவர்கள் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் எவ்வித பேனர்களோ, கொடிகளோ கொண்டு செல்லக் கூடாது.
  பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்பவர்கள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட கீழ்கண்ட வழித்தடங்களில மட்டுமே செல்லவேண்டும்.
  சாத்தூர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து பசும்பொன் செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை-காந்தி நகர் - ராமலிங்காமில் - கல்லூரணி - எம்.ரெட்டியாபட்டி – மண்டப சாலை –கானாவிலக்கு –கமுதி –பசும்பொன் சென்று மீண்டும் அந்த வழியே திரும்ப வேண்டும்.
  ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பசும்பொன் செல்லும் வாகனங்கள் கல்குறிச்சி – பாலையம்பட்டி பை-பாஸ் -காந்தி நகர் -இராமலிங்காமில் -கல்லூரணி –எம்.ரெட்டியபட்டி - மண்டபசாலை, கானாவிலக்கு, கமுதி, பசும்பொன் சென்று மீண்டும் அந்த வழியே திரும்ப வேண்டும்.
  திருச்சுழியிலிருந்து வரும் வாகனங்கள் ராமலிங்காமில் - கல்லூரணி –கானாவிலக்கு- கிளாமரத்துப்பட்டி - கமுதி –பசும்பொன் சென்று மீண்டும் அந்த வழியே திரும்ப வேண்டும். முத்துராமலிங்கபுரம், புதூர், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
  விருதுநகர் மாவட்டத்திலிருந்து அஞ்சலி செலுத்த செல்பவர்கள் மாவட்ட நிர்வாகத்தால், தடை செய்யப்பட்டுள்ள வழித்தடங்களில் செல்லக் கூடாது.  வாகன அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் கமுதி - பசும்பொன் நினைவகத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகன உரிமையாளர் தணிக்கையின் போது கட்டாயம் வாகனத்தில் இருக்க வேண்டும். வாகனத்தில் ஆர்.சி பெர்மிட், ஓட்டுநர் உரிமம், மற்றும் சான்றிதழ்கள் அசலோ அல்லது  சான்று பெறப்பட்ட உண்மை நகல்களோ கொண்டு செல்லவேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 29.10.17 மற்றும் 30.10.17 ஆகிய தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பேருந்து வசதிகள் செய்து தரப்படும். பசும்பொன் செல்ல கூடுதல் பேருந்து தேவைப்படும் கிராமத்தினர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில்  மனு செய்திட வேண்டும். அரசு பேருந்துகளில் ஜோதி, மது பாட்டில் மற்றும் ஆயுதங்கள் எடுத்துச் செல்வது கொடி மற்றும் பேனர் கட்டிச்செல்வது, ஒலிபெருக்கி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் மேற்கூரை மற்றும் படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது. பேருந்துகளில் அனைவரும் முறையாக பயணச்சீட்டு பெற்று பயணம் செய்ய வேண்டும்.
  தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு நகராட்சி, பேருராட்சி மற்றும் ஊராட்சிகளில் பிளக்ஸ் போர்டு மற்றும் சுவரொட்டிகள் , சுவர் விளம்பரங்கள் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. சொந்த ஊர்களில் 30ம் தேதிக்கு முந்தைய தினமோ அல்லது பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும் ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. 30ம் தேதி மட்டும் அவரவர் சொந்த ஊர்களில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டிகளில் வருதல், சாதித்தலைவர்கள் வேடம்  அணிந்து வருதல் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை என மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சி.முத்துகுமரன் அவர்கள் தெரிவித்தார். 
  இக்கூட்டத்தில், காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து