முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெலிங்டன் ராணுவ மையத்தில் 71_வது காலார்படை தினம் கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      நீலகிரி
Image Unavailable

வெலிங்டன் ராணுவ மையத்தில் 71_வது காலார் படை தினம் கொண்டாடப்பட்டது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ளது வெலிங்டன் ராணுவ மையம். இங்குள்ள மெட்ராஜ் ரெஜிமெண்டல் சென்டரில் ஆண்டுதோறும் அக்டோபர் 27_ ந் தேதி காலார்படை தினம் கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு 71_வது காலார்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. 1947 ம் ஆண்டு இதே நாளில் காலார் படையினர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு எதிரிகளிடமிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். இவர்களின் இந்த வீரச்செயலை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27_ந் தேதியை இந்திய ராணுவத்தில் காலார் படை தினமாக கொண்டாடப்படுகிறது.  

மலர்வளையம்

அதனையொட்டி வெலிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்குள்ள  ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் ராணுவ அதிகாரி பிரிகேடியர் அஜித் சிங், எம்.ஆர்.சி தலைமை அதிகாரி பிரிகேடியர் எஸ்.கே.சாங்கவான் முன்னாள் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து