முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகாடு மலைக்கிராம பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை முன்னாள் இராணுவ வீரர் பி.கண்ணன் வழங்கினார்

திங்கட்கிழமை, 30 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வடகாடு ஊராட்சி வடகாடு மலைக்கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் ஆதரவற்ற மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஒட்டன்சத்திரம் கே.இராமானுஜம் அம்மாள் அன்பு இல்லம் அறக்கட்டளை(நன்கொடை இல்லா) சார்பில் வட்ட மேஜைகள், நாற்காலிகள், எழுதுகோல்கள், மதியஉணவு உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
 இவ்விழாவிற்கு வடகாடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் எ.ராஜசேகரன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் குணா (எ) பெருமாள்சாமி, தமிழ்நாடு பத்திரிக்கையாளர் முன்னேற்றச்சங்கத்தின் பி.ராம்குமார், இளையதளபதி டாக்டர்.விஜய் மக்கள் இயக்க ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் பி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கு வருகைதந்த அனைவரையும் கண்ணனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பா.செந்தில்குமார் வரவேற்றுப்பேசினார்.
 முன்னதாக இவ்விழாவில் ஒட்டன்சத்திரம் கே.இராமானுஜம் அம்மாள் அன்பு இல்லம் அறக்கட்டளை(நன்கொடை இல்லா) ஸ்தாபகரும், முன்னாள் இராணுவ வீரருமான பி.கண்ணன் சார்பில் வடகாடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, கே.மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கண்ணனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சுரைக்காய்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெத்தேல்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிறுவாட்டுக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கோமாளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்;கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயில்கின்ற ஆதரவற்ற மலைவாழ் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் வட்ட மேஜைகள், நாற்காலிகள், எழுதுகோல்கள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கி எதிர்கால இந்திய தூண்களான மாணவர்கள் சிறப்பான கல்வியைக்கற்று வாழ்வில் சிறப்படைவதோடு நாட்டை நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என கூறினார். இவ்விழாவில் தலைமையாசிரியர்கள் கே.மேட்டுப்பட்டி விஜயலட்சுமி, சுரைக்காய்பட்டி ஜெ.ஜெயபாரதி, பெத்தேல்புரம் ச.சுசீலா, உதவி ஆசிரியர்கள் வீ.பால்ராஜ், இளவரசன் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து