முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பரிசுத் தொகை ரூ. 311 கோடியாக உயர்வு

புதன்கிழமை, 2 மே 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கான பரிசுத் தொகை 311 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

டென்னிஸ் விளையாட்டில் மிகவும் உயர்ந்த தொடராக கருதப்படுவது கிராண்ட்ஸ்லாம். ஆண்டிற்கு ஆஸ்திரேலியா, பிரெஞ்ச், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர் நடத்தப்படும்.
இதில் ஆஸ்திரேலியா ஓபன் முதலாவதாகவும், பிரெஞ்ச் 2-வதாகவும், விம்பிள்டன் 3-வதாகவும், அமெரிக்கா ஓபன் கடைசியாகவும் நடைபெறும். ஜனவரி மாதம் முடிவடைந்த ஆஸ்திரேலிய ஓபனின் பரிசுத்தொகை 41.32 மில்லியன் டாலராக இருந்தது.

தற்போது விம்பிள்டன் தொடருக்கான பரிசுத் தொகை 46.6 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய பண மதிப்பில் இது 311.06 ரூபாயாகும். இது கடந்த ஆண்டடை விட 7.6 சதவீதம் உயர்வாகும். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா 2.25 மில்லியன் பவுண்டு (19.99 கோடி ரூபாய்) வழங்கப்பட இருக்கிறது. கடந்த முறை 2.2 மில்லியன் பவுண்டுதான் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த மாதம் 21-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபனுக்கான பரிசுத் தொகை 47.18 மில்லியன் டாலராகும். விம்பிள்டன் தொடர் ஜூலை 2-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. அமெரிக்கா ஓபன் ஆகஸ்ட் மாதம் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து