எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அபுதாபி : ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை போராடி வெற்றி கொண்டது இந்திய அணி.
4-வது லீக் ஆட்டம்
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹாங் காங் அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
தவான் - ராயுடு அபாரம்
இந்தியா 7.4 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா 22 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்பதி ராயுடு 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவான் - அம்பதி ராயுடு ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.
286 ரன்கள் இலக்கு
3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த தவான், அதை சதமாக மாற்றினார். இந்தியா 198 ரன் எடுத்திருக்கும்போது 36-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து தவான் 105 பந்தில் 13 பவுண்டரின் சதம் அடித்தார். இது தவானின் 14-வது சர்வதேச சதமாகும். தொடர்ந்து விளையாடிய தவான் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியா 40.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின் வந்த டோனி (0), தினேஷ் கார்த்திக் (33), சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹாங் காங் அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஹாங் காங் அணி சார்பில் சின்சிட் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
174 ரன்கள் குவிப்பு
இதைத்தொடர்ந்தும் ஹாங் காங் அணி சேசிங் செய்ய தொடங்கியது, அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிசாகத் கான் மற்றும் கேப்டன் அன்சுமன் ராத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடத்தொடங்கிய இவர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நான்கு புறமும் சிதறடித்தனர். அந்த அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி சீராக உயர்ந்ததால் ஹாங் காங் அணி வெற்றியை நோக்கி சென்றது, இதனால் இந்திய வீரர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 174 ரன்களை குவித்து அசத்தியது.
கலீல் அகமது பந்தில்...
ஆனால், குல்தீப் யாதவ் வீசிய 34-வது ஓவரில் அன்சுமன் ராத் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 97 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். அடுத்து சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிசாகத் கான் 92 ரன்களில் அறிமுக வீரர் கலீல் அகமது பந்தில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்தியா வெற்றி
இதன் பின்னர் இந்திய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இதனால், அடுத்து களமிறங்கிய கார்டர் 3, பாபர் 18, ஷா 17, ஐஷாஸ் 0, எஸ்சான் 22 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து ஹாங் காங் அணி தடுமாறியது. எனவே 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 259 ரன்கள் மட்டுமே அடித்ததால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கலீல் அகமது மற்றும் சாகல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். சிறப்பாக விளையாடி சதமடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை3 min 37 sec ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 1 min ago |
மினி பான் கேக்1 week 19 hours ago |
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
என்ஜினீயரிங் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் குறைகிறது
07 May 2024சென்னை : நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளதால் பொறியில் கட்-ஆப் மதிப
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் பேட்டி
07 May 2024நெல்லை : அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என்று தன்னை தாக்கியவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் தெரிவித்தார்.
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.