முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் , சி.எஸ்.கே. அணி வீரருமான ரவீந்திர ஜடேஜா குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்தவர். இவரின் மனைவி ரிவாபா, கடந்த மாதம் 3-ம் தேதி ஜாம்நகரில் பா.ஜ.க. எம்.பி. பூனம்பென் மாடம் முன்னிலையில் இணைந்தார். இந்நிலையில், ஜாம்நகர் மாவட்டம், கலாவட் நகரில் நடந்த காங்கிரஸ் பேரணியின் போது, ஜடேஜாவின் தந்தை அனிருதுசிங், சகோதரி நைனாபா ஆகியோர் ஹிருதிக் படேல் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தனர்.

இந்த சூழலில், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட  ஜடேஜா, நான் பா.ஜ.க.வை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,  ஜடேஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நன்றி ஜடேஜா, உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து