முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் கவர்னருடன் உமர் அப்துல்லா சந்திப்பு

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக்கை தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என வதந்திகள் பரவின. ஆனால், மத்திய அரசு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது. அமர்நாத் யாத்திரை நேற்று முன்தினம் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில் காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே, காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் நேற்று காலை முதல் தகவல்கள் பரவின. கலவர தடுப்பு பிரிவு போலீசாரும் ஸ்ரீநகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக்கை முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா ராஜ்பவனில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து உமர் அப்துல்லா ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து