முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் ஸ்ட்ராம்போலி எரிமலை மீண்டும் வெடித்தது

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

இத்தாலி நாட்டில் தைரேனியன் கடல் பகுதியில் உள்ளது ஸ்ட்ராம்போலி தீவு. இத்தீவில் உள்ள ஸ்ட்ராம்போலி எரிமலை இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக வெடித்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது பற்றி அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் மிகப்பெரிய சத்ததுதுடன் எரிமலை வெடித்து எரிமலை குழம்பை கக்கியது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. பின்பு சிறிது நேரம் கழித்து இரு சிறிய அளவிலான வெடிப்புச் சத்தங்கள் கேட்டது என்று தெரிவித்தார். மேலும் மேற்கு பகுதியில் எரிமலைக் குழம்பு வடிந்து வருவதாகவும் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இது குறித்து இத்தாலி பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவிக்கையில், ஸ்ட்ராம்போலி தீவில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிகழ்வினால் உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

கடந்த புதன் கிழமை இந்த எரிமலை மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து அதிக அளவிலான எரிமலைக் குழம்பை வெளியேற்றியது. இதில் ஒருவர் பலியாகினார். ஒருவர் காயமடைந்தார். பின்பு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. 20000 ஆண்டுகளுக்கு மேல் உயிர்ப்புடன் இருப்பதாக கூறப்படும் இந்த எரிமலை, தற்போது ஏற்படுத்தியுள்ள தாக்கமே மிக அதிகமான விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து