முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விஞ்ஞானிகளை நினைத்து பெருமையடைகிறோம் : பூடான் பிரதமர்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

திம்பு : நாங்கள் இந்தியாவையும், இந்திய விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறோம் என்று பூடான் பிரதமர் ஷெரிங் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் - 2 விண்கலத்தின் லேண்டர் சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இருந்தாலும் சமூக வலைதளங்களில் பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரோல் விஞ்ஞானிகளை பூடான் பிரதமர் ஷெரிங் வெகுவாக பாராட்டி உள்ளார்.
இது குறித்து பூடான் பிரதமர் ஷெரிங் தனது டுவிட்டர் பக்கத்தில், நாங்கள் இந்தியாவையும், இந்திய விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறோம். சந்திராயன் கடைசி நிமிடத்தில் சவால்களை எதிர்கொண்டது. எனக்கு பிரதமர் நரேந்திர மோடியை நன்கு தெரியும். மோடியும் அவரது இஸ்ரோ குழுவும் நிச்சயம் இந்த வெற்றியை எதிர்காலத்தில் பெறுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து