முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை திருத்த சட்டம் அவசியம்: நடிகர் ரஜினிகாந்த்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

குடியுரிமை திருத்த சட்டம் அவசியம் தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வரும் என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். குடியுரிமை சட்ட திருத்தத்தால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 

நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன் என்றும் சட்டவிரோதமாக எந்த செயலும் செய்யவில்லை என்று ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். மாணவர்கள் போராட்டத்தில் இறங்கு முன் ஆலோசித்து ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்திய ரஜினி, இல்லையென்றால் மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்ள பார்ப்பார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஆபத்து வந்ததால் முதல் ஆளாக எதிர்ப்பேன் என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஒரு நபர் ஆணையம் சம்மன் அனுப்பினால் விளக்கம் அளிப்பேன் என்று ரஜினிகாந்த் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து