முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் வீரர் - வீராங்கனைகள் - சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலில் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 19 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

லாசானே : கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று வீரர், வீராங்கனைகள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலை வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த உயிர்க்கொல்லி வைரசுக்கு பலியாகி உள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உலகம் முழுக்க பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல விளையாட்டுத் துறையையும் பெரிய அளவில் பாதித்துள்ளது.இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு அந்த போட்டி நடைபெறுமா என்ற நிச்சயமற்ற நிலை உள்ளது. இந்த போட்டி ரத்தானால் ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படும்.இதேபோல சர்வதேச அளவில் கால்பந்து, டென்னிஸ் போட்டிகள், உள்ளூர் லீக் போட்டிகள் உள்பட அனைத்து வகையான விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுமா? என்று சந்தேகம் நிலவி வருகிறது.ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்று தொடர்ந்து கூறி வருகிறது. இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட போட்டி நடைபெறுவதற்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் தற்போதைய நிலையில் எந்தவொரு கடினமான முடிவையும் எடுக்க தேவையில்லை என்று கூறி இருந்தது.ஐ.ஓ.சி.யின் இந்த முடிவுக்கு வீரர், வீராங்கனைகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று வீரர், வீராங்கனைகள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலை வலியுறுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து