முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா பிறந்த நாள் : ஐ.சி.சி. புகழாரம்

சனிக்கிழமை, 2 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

வெஸ்ட் இண்டீஸ் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா நேற்று பிறந்த நாள் கொண்டாடினார். அவரை வாழ்த்தும் வகையில்  ஐ.சி.சி. டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா நேற்று தன்னுடைய 51வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் 1996 - ம் ஆண்டு  உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு வெஸ்ட் இண்டீஸை முன் நிறுத்திய பிரைன் லாராவின் கிளாசிக் தருணத்தின் கிரிக்கெட் வீடியோவை ஐ.சி.சி. டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. 

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

இன்று  ( நேற்று ) பிரைன் லாராவின் பிறந்தநாள். இந்த இன்னிங்ஸ்கள் நம் அனைவருக்கும் கிடைத்த பரிசு. 1996 - ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையில், இளவரசரிடமிருந்து ஒரு கிளாசிக். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 94 பந்துகளில் அவர் எடுத்த 111 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ்சை அரையிறுதிக்குக் கொண்டு சென்றது என பதிவிட்டுள்ளது. பிரைன் லாராவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங், ஸ்டைலான, இடது கை பேட்ஸ்மேனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் டிரினிடாட்டின் இளவரசர், ஒரு சிறந்த மனிதர். பிரையன்லாரா போன்ற லெஜண்ட்டுகள் விளையாடிய மற்றும் ஊக்கமளித்த சகாப்தத்தில் நான் கிரிக்கெட் விளையாடினேன் என்பது பெருமையாக உள்ளது என்று டுவிட் செய்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து