முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்.4-ல் நடைபெறும்: யு.பி.எஸ்.சி

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்.4-ம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு (பிரிலிமினரி), மே மாதம் 30-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வுக்காக 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தயாராகி வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில்  மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது. சிறப்பு கூட்டம் முடிந்த பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்த ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட சிவில் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து மே 31 முதல்நிலைத் தேர்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வு  2020- அக்டோபர் அக்.4-ம் (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரே நாளில் நடைபெறுகிறது.  முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.

ஏற்கெனவே 2019-ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு எழுதி தேர்வானவர்களுக்கான நேர்முகத் தேர்வு 2020- ஆண்டு ஜூலை 20 அன்று நடக்கிறது. இதற்கான அழைப்பு மாணவர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும். மேற்கண்ட தேர்வுத் தேதிகள் சூழ்நிலையைப் பொறுத்து மாற்றத்துக்கு உட்பட்டவை. இவ்வாறு யு.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து