முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா

புதன்கிழமை, 22 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

விருதுநகர் : ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. இதில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார்.

எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் மனைவி, மகன் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நிலையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  இதைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்து இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து