முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஆரல்வாய்மொழி : தோவாளை மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் குமரி, நெல்லை, மதுரை, தேனி, தர்மபுரி, சேலம் உள்பட பல மாவட்டத்தில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

பூக்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படும். தினமும் அதிகாலையிலேயே பூக்கள் விற்பனைக்கு வருவதால் வியாபாரிகளும் அதிகாலையிலேயே வந்து பூக்களை வாங்கி செல்வார்கள். விற்பனையும் மும்முரமாக நடைபெறும்.   

ஆயுத பூஜைக்கு இன்னும் இரண்டு தினங்களே இருப்பதால் தோவாளை பூ மார்க்கெட் களை கட்டியுள்ளது. வழக்கத்துக்கு மாறாக வெளியிடங்களில் இருந்து அதிக அளவிலான ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட கலர் பூக்கள் வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.  கடந்த சில நாள்களாக பூக்களின் வரத்து அதிகரித்துள்ளன.

சாதாரணமாக தினமும் 10 டன் பூக்கள் வரும். ஆனால், கடந்த புதனன்று 25 டன், நேற்று 30 டன் பூக்கள் மார்க்கெட்டில் வந்து குவிந்தன. இங்கு நேற்றும் (வெள்ளிக்கிழமை) மற்றும் இன்றும் (சனிக்கிழமை) பூக்கள் வரத்து அதிகரித்து விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் என தெரிகிறது. 

அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சாதாரணமாக ரூ. 150 க்கு விற்பனையான அரளி (கழனி) நேற்று முன்தினம் ரூ. 280-க்கு விற்பனையானது. அதே போல பிச்சி மற்றும் மல்லிகை பூக்கள் வழக்கத்தை விட கூடுதல் விலையில் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து