முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிராவில் முகக்கவசங்களை வைத்து படுக்கைகள் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மகராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள குசம்பா கிராமத்தில் படுக்கைகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சிலர், கீழே வீசப்பட்ட பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை சேகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் தீவிரமாக கண்காணித்து அந்த தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு தயாரிக்கப்படும் படுக்கைகளில் பஞ்சுகளை வைப்பதற்கு பதிலாக, பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் வைக்கப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அந்த ஆலைக்கு சீல் வைத்து ஆலையின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொழிற்சாலையில் டன் கணக்கில் இருந்த பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை தீயிட்டு கொளுத்தினர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மகராஷ்டிராவில் தான் அதிகம் காணப்படுகிறது. இதுபோன்ற சூழலில், பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களில் படுக்கைகள் தயாரிப்பது கொடுமை. இதுபோன்ற தொழில் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் வலியுறுத்தி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து