முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீராங்கனையின் அவலம்

ஞாயிற்றுக்கிழமை, 23 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜார்க்கண்ட் மாநிலத்தில் செங்கல் சூளை ஒன்றில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார் சர்வதேச கால்பந்தாட்ட களத்தில் இந்திய அணிக்காக விளையாடிய வீராங்கனை சங்கீதா சோரன். தாய்லாந்து மற்றும் பூட்டானில் நடைபெற்ற கால்பந்தாட்ட தொடரில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியவர் சங்கீதா சோரன்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “எனது குடும்பத்தின் நிதி சூழல் நான் செங்கல் சூளையில் வேலை செய்ய காரணம். எனது அப்பாவுக்கு கண் பார்வையில் கோளாறு. அவரால் சரிவர கேட்கவும் முடியாது. எனது மூத்த சகோதரர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். எனது வீட்டு தேவைக்காக நான் வேலை செய்து வருகிறேன்”  என்றார்.

____________

ஜிம்பாப்வே வீரரின் ஏக்கம்

“எங்களுக்கு மட்டும் ஏதேனும் ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் எங்களது ஷூவுக்கு(காலணி) பசை ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது” என சொல்லி சர்வதேச கிரிக்கெட் சங்கத்தை டேக் செய்து ரியான் பர்ல் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட் தற்போது வைரலாகி உள்ளது. 

அதோடு பலரும் அவருக்கும், அவரது அணிக்கும் வேண்டும் நிதியுதவியை அளிக்க முன் வந்துள்ளனர். சிலர் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கு மாடர்ன் டே கிரிக்கெட்டில் அளிக்கப்பட்டு வரும் நிதியுதவி குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். அண்மையில் பாகிஸ்தான் அணியுடன் ஜிம்பாப்வே அணி டி-20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி இருந்தது. 

______________

மருமகன் குறித்து சாஹித் அப்ரிடி

பாகிஸ்தான் அணியின் முன்னாள அதிரடி பேட்ஸ்மேன் சாஹித் அப்ரிடி. இவரது மகளை தற்போது பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடி திருமணம் செய்ய இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தனது மகளுக்கும், ஷாஹீன் ஷாவிற்கும் இடையில் திருமணம் நடைபெற இருக்கிறது என்பதை சாஹித் அப்ரிடி உறுதிப்படுத்தியுள்ளார். மகளின் திருமணம் குறித்து சாஹித் அப்ரிடி கூறுகையில் ‘‘ஷாஹின் ஷா எனது வருங்கால மருமகன் ஆக இருக்கிறார். தற்போது எனது மகள் படிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் டாக்டர் படிக்க விரும்புகிறார்.  ஷாஹீன் ஷா தொடர்ந்து விளையாட்டிலும், விளையாட்டிற்கு வெளியிலும் சிறப்பாக செயல்பட வேண்டு என நான் பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.

_____________

லாகூர் அணியில் ரஷித் கான்

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 கிரிக்கெட் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. கொரோனா தொற்று அதிகரிக்க 14 போட்டிகள் நடைபெற்ற பின், போட்டி ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள போட்டிகளில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 20-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.

லாகூர் குவாலண்டர்ஸ் அணி ஆப்கானிஸ்தானின் ரஷித் கானை ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்பின் அவருக்குப் பதிலாக வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசனை ஒப்பந்தம் செய்தது. ஷாகிப் அல் ஹசன் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் ரஷித் கானை லாகூர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ‘‘மீண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக், லாகூர் அணிக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது  என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து