முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டி-20 மகளிர் கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தியது ஆஸி.

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

இந்தியா ஆஸ்திரேலியா பெண்கள் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது

முதல் போட்டி...

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராரா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. 

பந்துவீச்சு தேர்வு...

டாஸ்  வென்ற   ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங்  பந்துவீச்சை  தேர்வு செய்தார். அதன் படி முதலில் களம்  இறங்கிய  இந்திய அணியின்  மந்தனா மற்றும் ஷபாலி வர்மா தொடக்கம் முதலே தடுமாறினர்.  மந்தனா 1 ரன்னிலும் ,ஷபாலி வர்மா 3 ரன்னிலும்  அடுத்தடுத்து  ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீராங்கனைகளும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா அணியால்  20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

ஆஸி. முன்னிலை...

 

இந்தியா அணியின் சார்பில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரகர் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்  இருந்தார். இதனை தொடர்ந்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கிய ஆஸ்திரேலியா பெண்கள்  அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . ஆஸ்திரேலியாவின் தஹ்லா  மெக்ராத் 42 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார் . இதனால்  3 ஆட்டங்கள் கொண்ட 20ஓவர் தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து