முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்ஜீரியா நாட்டிலும் ஒமைக்ரான் பரவியது

புதன்கிழமை, 15 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது. அல்ஜீரியா நாட்டில் முதல்முறையாக ஒமைக்ரான் கால் பதித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து அல்ஜீரியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து