எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெண் படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கம் போல் நேற்று கடல் பாசி எடுக்க சென்றுள்ளார். அவர் தினமும் மாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பி விடுவார். ஆனால் நேற்று மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சம் அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் வடகாடு கடல் பகுதியில் தேடினர்.
இரவு வரை தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அது குறித்து கணவர் ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வடகாடு பகுதிக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் மாயமான பெண்ணை வடகாடு கடற்கரையை ஒட்டியுள்ள காட்டு பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்திரா அங்கிருந்த முள்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரைநிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்திருந்தது. கழுத்தில் துணியால் இறுக்கியதற்கான தடயங்கள் இருந்தன. இதனால் அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொன்று விட்டு உடலை தீ வைத்து எரித்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசாருடன் சென்ற ஊர் மக்கள் ஆத்திரம் அடைந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். மேலும் இறால் பண்ணையில் பணிபுரிந்த 6 வடமாநில வாலிபர்களையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கி, அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டினர்.
அந்த 6 வாலிபர்களையும் போலீசார் மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சந்திராவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த ஊர் மக்கள் பெண்ணின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் உடலை எடுக்க அனுமதித்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் வடமாநில வாலிபர்கள் 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர்களில் 3 பேர் சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை தீவைத்து எரித்தது தெரியவந்தது. கடல் பாசி சேகரிப்பதற்காக சந்திரா சென்றபோது, அவரை இறால் பண்ணையில் வேலை பார்த்த வடமாநில வாலிபர்கள் 3 பேர் கஞ்சா போதையில் வழிமறித்து தகராறு செய்திருக்கின்றனர். பின்பு அவரை வடகாடு காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன்பிறகு சந்திராவை அங்கு வைத்து அவரது சேலையாலேயே கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கின்றனர்.
சந்திராவை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக முட்புதரில் அவரது உடலை போட்டு முகம் மற்றும் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்திருக்கின்றனர். இதையடுத்து வடமாநில வாலிபர்கள் 3 பேரும் தாங்கள் பணிபுரிந்து இறால் கம்பெனிக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் சந்திரா படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈட வழங்க வேண்டும், வடமாநில வாலிபர்கள் வேலை பார்த்த இறால் பண்ணையை மூட வேண்டும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பவ இடத்திற்கு கலெக்டர் வரவேண்டும் மற்றும் தங்களின் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றுவதாக அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேசுவரத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்18 hours 42 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 21 hours ago |
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
15 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.