முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளில் செல்போனுக்கு எந்த காலத்திலும் அனுமதி கிடையாது : பறிமுதல் செய்யப்பட்டால் திருப்பி தரப்பட மாட்டாது: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022      தமிழகம்
Anbil-Mahes 2022 06 07

Source: provided

திருச்சி : பள்ளிகளில் செல்போனுக்கு எந்தக் காலத்திலும் அனுமதி கிடையாது. ஒருவேளை அதைமீறி யாராவது செல்போன் கொண்டு வந்தால், பறிமுதல் செய்யப்படும். அந்த செல்போன் திருப்பித் தரப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் தமிழக அரசு சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

பள்ளிக்கு செல்போன் கொண்டு வரக் கூடாது என்று ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  சட்டமன்றக் கூட்டத் தொடரில் பேசும் போது கூறியிருந்தேன். செல்போனுக்கு எந்தக் காலத்திலும் அனுமதி கிடையாது. ஒருவேளை அதைமீறி யாராவது வகுப்பறைக்கு செல்போன் கொண்டு வந்தால், பறிமுதல் செய்யப்படும். அந்த செல்போன் திருப்பித் தரப்பட மாட்டாது என்று ஏற்கெனவே அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளோம். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே குழந்தைகள் படித்துக் கொண்டிருந்ததால், கவனச்சிதறல் அதிகமாக உள்ளது. அதைப் போக்கும் வகையில்தான் பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்தவுடன் அவர்களது மனதை புத்தாக்கம் செய்த பின்னர்தான், வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து