எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆவினில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 236 பணி நியமனங்களை ரத்து செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக 26 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.
2021ம் ஆண்டு ஆவினில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்துடன் இணைத்த வரைவோலையை வேறு நபா்களுக்குப் பயன்படுத்தியது, எழுத்துத் தோ்வுக்கான வினாத்தாளை கசியவிட்டது, உரிய கல்வித் தகுதி இல்லாத நபா்களைத் தோ்வு செய்தது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முறைகேடு செய்து நியமனம் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடா்பாக, ஆவின் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இரண்டு கட்டங்களை விசாரணை நடத்தினா். அவா்களது அறிக்கையின்பேரில், துறை ரீதியான விசாரணைக்கு பால்வளத் துறை ஆணையா் சுப்பையன் உத்தரவிட்டார். இந்த விசாரணையில் 6 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இந்நிலையில் 236 பணி நியமனங்களை ரத்து செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மதுரை 47 பேர், திருச்சி 40 பேர், தேனி 38பேர், திருப்பூர் 26 பேர், விருதுநகர் 26 பேர், நாமக்கல் 16 பேர், தஞ்சாவூர் 8 பேர் என்று மொத்தம் 236 பேரின் பணி நியமனங்களை ரத்து செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு துணையாக இருந்த 26 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விருதுநகர், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் சுமார் 6 அதிகாரிகளிடமிருந்து ரூ.2,47,900 தண்டத் தொகை வசூல் செய்யவும், திருப்பூர், தேனி மற்றும் விருதுநகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் நிர்வாகக் குழுவை கலைத்தும் ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025