எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 11 -ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கு தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது. நடப்பு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருக்காது. மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்பட்டது.
அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்காக 11-ம் வகுப்பு பாடங்களையே நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை நேரடியாக தனியார் பள்ளிகள் எடுத்து வந்த காரணத்தினால் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்க முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது 11-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வை எழுதுவதற்கு சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் கல்வித்துறை யோசித்திருக்கலாம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருந்தாலும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025