எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத் : 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதே காங்கிரசின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது,
2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதே காங்கிரசின் நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டில் மாற்று அரசை அமைக்க அயராது உழைக்க வேண்டும். புதிய பிரச்சினைகளை கொண்டு வந்து முக்கியமான அடிப்படை பிரச்சினைகளில் இருந்து மக்களை மோடி அரசு திசை திருப்புகிறது.
சமீபத்தில் மும்பையில் இண்டியா கூட்டணி கட்சி கூட்டம் நடந்த போது, மோடி அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழுவை அமைத்தது. அனைத்து மரபுகளுக்கும் முரணாக இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதி சேர்க்கப்பட்டுள்ளார்.
நமது தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைத்து விட்டு ஓய்வின்றி நாம் உழைக்க வேண்டும். மேலும், நமது தனிப்பட்ட வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு கட்சியின் வெற்றியை முன்னிலைப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த சர்வாதிகார அரசை துடைத்தெரிய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |