முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சு: தெலுங்கானா முதல் கண்டனம்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      இந்தியா
Revanth-Reddy 2023-12-05

ஐதராபாத், சனாதனம் பற்றிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்போது சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

உதயநிதியின் கருத்து தவறானது. இதனை நான் கண்டிக்கிறேன். 

ஒரு குடும்பத்திற்குள் கூட, தனிநபர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்.  உதயநிதியின் நிலைப்பாடு அவருடையது. தெலுங்கானா மாநிலத் தலைவர் மற்றும் முதல்வர் என்ற முறையில், சனாதன தர்மம் குறித்த கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது கொள்கை. மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தீங்கு விளைவிக்காமல் அனைத்து நம்பிக்கைகளையும் நிலை நிறுத்துவது முக்கியம்.

பா.ஜ.க.வின் 400 தொகுதிகளில் வெற்றி முழக்கம் என்பது தேர்தல் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருத்தமானது. தற்போது இது சாத்தியமில்லை. 

குஜராத்தில் 26 இடங்களையும், அரியானாவில்  உள்ள 10 தொகுதிகளிலும், டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் கூட. பீகாரில் 39 முதல் 40 இடங்களும், உத்தரபிரதேசத்தில் 62 இடங்களும், வங்காளத்தில் 18 இடங்களும், வட மாநிலங்களில் கணிசமான பெரும்பான்மையும் பெற்றால், 300 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும். பா.ஜ.க.வால் இலக்கை அடைய முடியாது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து