முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      இந்தியா
Amit-Shah 2023-11-17

புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம். வேறு யாரையும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட விட மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது:- 

மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் அமைப்பையே பா.ஜ.க. மாற்றிவிடும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், அப்படிப்பட்ட  ஒரு எண்ணம் தங்களுக்கு இல்லை.  நினைத்து  இருந்தால்  முன்பே அரசியல் அமைப்பை மாற்றியிருப்போம்.   

10 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் இருந்தாலும்    நங்கள் அதை தவறாக பயன்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சிக்குத்தான் பெரும்பான்மையை தவறாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.  இட ஒதுக்கீட்டு கொள்கையை ஒருபோதும் மோடி அரசு மாற்றாது. நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம். வேறு யாரையும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட விட மாட்டோம். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து