முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      தமிழகம்
Election 2024-03-29

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணியளவில் வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. இறுதியாக வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 72.09% வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் :

1. திருவள்ளூர்  – 68.31%, 2. வட சென்னை – 60.13%, 3. தென் சென்னை – 54.27%, 4. மத்திய சென்னை– 53.91%, 5. ஸ்ரீபெரும்புதூர்– 60.21%, 6. காஞ்சிபுரம்   – 71.55%, 7. அரக்கோணம்  – 74.08%, 8. வேலூர்  – 73.42%, 9. கிருஷ்ணகிரி   – 71.31%, 10. தருமபுரி – 81.48%, 11. திருவண்ணாமலை    – 73.88%, 12. ஆரணி– 75.65%, 13. விழுப்புரம்  – 76.47%, 14. கள்ளக்குறிச்சி    – 79.25%, 15. சேலம் – 78.13%, 16. நாமக்கல்    – 78.16%, 17. ஈரோடு   – 70.54%, 18. திருப்பூர்– 70.58%, 19. நீலகிரி   – 70.93%, 20. கோயம்புத்தூர்  – 64.81%, 21. பொள்ளாச்சி – 70.70%, 22. திண்டுக்கல்  – 70.99%, 23. கரூர்    – 78.61%, 24. திருச்சிராப்பள்ளி – 67.45%, 25. பெரம்பலூர்   – 77.37%, 26. கடலூர்   – 72.28%, 27. சிதம்பரம்   – 75.32%, 28. மயிலாடுதுறை  – 70.06%, 29. நாகப்பட்டினம்  – 71.55%, 30. தஞ்சாவூர்   – 68.18%, 31. சிவகங்கை– 63.94%, 32. மதுரை  – 61.92%, 33. தேனி  – 69.87%, 34. விருதுநகர் – 70.17%, 35. ,ராமநாதபுரம்     – 68.18%, 36. தூத்துக்குடி   – 59.96%, 37. தென்காசி – 67.55%, 38. திருநெல்வேலி  – 64.10%, 39. கன்னியாகுமரி– 65.46%, மொத்தம்– 69.46%.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து