முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      இந்தியா      அரசியல்
Electronic-Machine 2023-10-

டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்கட்ட தேர்தல்...

18-வது பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ந் தேதி தமிழ்நாடு, புதுவை உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்குப் பதிவு பொதுவாக அமைதியாக நடைபெற்றது.  பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 2-வது கட்டமாக 13 மாநிலங்களில் மொத்த 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 2-வது கட்டமாக கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களின் 89 தொகுதிகளில் வரும் 26-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 89 தொகுதிகளிலும் இறுதி கட்ட பிரசாரம் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஒரே கட்டமாக 20 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

2-ம் கட்ட தேர்தல்...

அஸ்ஸாம்: 5 (மொத்தம் 14 தொகுதிகள்), பீகார்: 5 (மொத்தம் 40), சத்தீஸ்கர்: 3 (மொத்தம் 11), கர்நாடகா: 14 (மொத்தம் 28), கேரளா: மொத்தம் 20 இடங்கள், மத்திய பிரதேசம்: 7 (மொத்தம் 29), மகாராஷ்டிரா: 8 (மொத்தம் 48), மணிப்பூர்: 1 (மொத்தம் 2), ராஜஸ்தான்: 13 (மொத்தம் 25), திரிபுரா: 1 (மொத்தம் 2), உத்தரப் பிரதேசம்: 8 (மொத்தம் 80), மேற்கு வங்கம்: 3 (மொத்தம் 42), ஜம்மு மற்றும் காஷ்மீர்: 1 (மொத்தம் 5).

89 தொகுதிகள் விவரம்...

அஸ்ஸாம் - தர்ராங், உடல்குரி, திபு, கரீம்கஞ்ச், சில்சார், நாகோன். - பீகார் - கிஷன்கஞ்ச், கதிஹார், பூர்ணியா, பாகல்பூர், பாங்கா. சத்தீஸ்கர் - ராஜ்நந்த்கான், மகாசமுந்த், காங்கர். கர்நாடகா - உடுப்பி சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மண்டியா, மைசூர், சாமராஜநகர், பெங்களூர் ரூரல், பெங்களூர் வடக்கு, மத்திய பெங்களூர், பெங்களூர் தெற்கு, சிக்கபள்ளாபூர், கோலார். மத்திய பிரதேசம் - திகம்கர், தாமோஹ், கஜுராஹோ, சத்னா, ரேவா, ஹோஷங்காபாத், பெதுல். மகாராஷ்டிரா - புல்தானா, அகோலா, அமராவதி, வர்தா, யாவத்மால் - வாஷிம், ஹிங்கோலி, நாந்தேட், பர்பானி. மணிப்பூர் - அவுட்டர்மணிப்பூர். 

ராஜஸ்தான் - உ.பி...

ராஜஸ்தான் - டோங்க்-சவாய் மாதோபூர், அஜ்மீர், பாலி, ஜோத்பூர், பார்மர், ஜலோர், உதய்பூர், பன்ஸ்வாரா, சித்தோர்கர், ராஜ்சமந்த், பில்வாரா, கோட்டா, ஜலவர்-பரான். திரிபுரா - திரிபுரா கிழக்கு. - உத்தரப்பிரதேசம் - அம்ரோஹா, மீரட், பாக்பத், காசியாபாத், புலந்த்ஷாஹர், கௌதம் புத்தா நகர், அலிகார், மதுரா. மேற்கு வங்காளம் - டார்ஜிலிங், ராய்கஞ்ச், பலூர்காட். ஜம்மு மற்றும் காஷ்மீர் - ஜம்மு, மற்றும் கேரளாவின் மொத்தம் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும்.

ராகுல் காந்தி...

கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா, திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சுரேஷ் கோபி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் போட்டியிடுவதால் இந்த தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக மாறியுள்ளன. இதனால் வயநாடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய 3 தொகுதிகளின் முடிவு அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து