முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      தமிழகம்
SUN 2023-02-28

Source: provided

புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வட  உள்மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி பாரன்ஹிட் வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை... 

நாடு முழுவதும் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அக்னி நட்சத்திர காலத்திற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது.  பல இடங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், பல இடங்களில் கோடை வெயில் சதம் அடித்து வருகிறது.

15 மாவட்டங்களில்...

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இருக்கும்வரை மக்கள் தேவையின்றி வெளியில் போவதைத் தவிர்க்க வேண்டும்.  

28-ம் தேதி வரை...

தமிழகத்தை போல் கர்நாடகா,  தெலங்கானா,  ராயலசீமா, உத்திரப்பிரதேசம்,  கடலோர ஆந்திரா மற்றும் ஏனம்,  மேற்கு வங்கம்,  சிக்கிம்,  ஜார்க்கண்ட்,  பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 28 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் கடலோர ஒடிசாவின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மிகக் கடுமையான வெப்ப அலை வீச கூடும் என்றும் எச்சரித்துள்ளது.  இன்றும் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மேற்குவங்க மாநிலத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கையும்,  ஒடிசாவிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து