முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      இந்தியா
Amit-Shah 2023-11-26

Source: provided

ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,​பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.

கேரள மாநிலம் ஆழப்புழாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: உலகிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதை முடிந்துவிட்டது. கேரளாவில் காங்கிரசும் கூட்டணி வைக்க மறுத்து விட்டது. கேரளாவில் பா.ஜ.,வுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. வெற்றி பெற்றால், இந்தியாவின் அணு ஆயுதங்கள் அகற்றப்படும் என கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்களை அகற்ற முடியாது.

பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க ஒட்டுமொத்த கேரளா மக்களும் தயாராக உள்ளனர். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர். இந்த தேர்தல் வன்முறை இல்லாத கேரளாவை உருவாக்குவதற்கான தேர்தல். நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்குவதற்கான தேர்தல். இண்டியா கூட்டணியின் இரு பங்காளிகள் கம்யூனிஸ்ட் மற்றும் மற்றும் காங்கிரஸ். டில்லியில் ஒரு மேடையில் ஒன்றிணைகின்றன.

கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள். அவர்களின் சண்டை போலியானது. கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது, ​​பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர். பி.எப்.ஐ., பயங்கரவாத அமைப்பிற்கு தடை விதித்தது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் கம்யூனிஸ்ட் கட்சிகள் மவுனம் காக்கிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி தேசத்தை காக்க பாடுபடுகிறார். தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ.,க்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளிக்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து