முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்

புதன்கிழமை, 1 மே 2024      இந்தியா
Neeraj-Basoya 2024-05-01

Source: provided

புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர். 

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் முன்னாள் டெல்லி அமைச்சர் அரவிந்த் சிங் லவ்லி. இவர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதற்கிடையே, கடந்த இரு நாட்களுக்கு முன் தனது கட்சியின் மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, டெல்லி மாநில காங்கிரசின் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின்  பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேவேந்தர் யாதவ் ஏற்கனவே பஞ்சாப் மாநில பொறுப்பாளராக உள்ளார்.

இந்நிலையில், டெல்லி மாநில இடைக்கால தலைவராக தேவேந்தர் நியமனம் செய்யப்பட்டதற்கும், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர். இதுதொடர்பான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து