எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயநாடு; கேரளம் மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தோரின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ள நிலையில், முண்டக்கை கிராம நிலச்சரிவில் 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் இறந்துள்ளனர், 23 மாணவர்களை காணவில்லை என கேரள பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கேரளத்தின் வடக்கே அமைந்த மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை(ஜூலை 30) அதிகாலை அடுத்தடுத்து பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.மலைப் பகுதியில் இருந்து பெரிய பாறைகளுடன் மண்ணும் கலந்துவந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன.
ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் மீட்பு-தேடுதல் பணியில் நேற்று 4-வது நாளாக ஈடுபட்டனர். இந்த நிலையில், வயநாடு முண்டக்கை, வெள்ளரிமலை கிராம நிலச்சரிவில் 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் மற்றும் 76 பெண்கள் இறந்துள்ளனர். மேலும் 23 மாணவர்களை காணவில்லை என கேரள பள்ளிக்கல்வித் துறை நடத்திய ஆய்வின் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |