எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை:சென்னையில் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியாயினர்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் படிக்கும் 5 மாணவர்கள் காரில் கோவளம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். காரை சிவா என்ற மாணவர் ஓட்டி சென்றார். பழைய மகாபலிபுரம் சாலை அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது.
நாய் மீது மோதாமல் இருப்பதற்காக சிவா காரை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகா ஸ்வேதா, பவித்ரா, லிங்கேஸ்வரன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த இருவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்லைன் பால் என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த சிவாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |