Idhayam Matrimony

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: மத்திய கிழக்கிற்கு அமெரிக்க போர் கப்பல்கள் விரைந்தன

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      உலகம்
America 2024 08 03

Source: provided

வாஷிங்டன் : ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதட்டம் நிலவுவதை தொடர்ந்து மத்திய கிழக்கில் ராணுவ பலத்தை அதிகரிக்க அங்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.

ஈரான் தலைநகர் டெக்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி அறிவித்தார். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.  

இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் நேரடி தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க ராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்து விவாதித்தார். 

ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹொதிகள் உட்பட ஈரானின் அனைத்து அச்சுறுத்தல்களில் இருந்தும் இஸ்ரேலை பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அதிபர் பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார். 

இஸ்ரேலின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளோடு, பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களைத் தணிப்பதற்கான தொடர் முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அமெரிக்க அதிபர் வலியுறுத்தினார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும் இந்த அழைப்பில் இணைந்தார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  

இதையடுத்து மத்திய கிழக்கில் அமெரிக்கா ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது. கூடுதல் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் மத்திய கிழக்கிற்கு விரைந்துள்ளன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து