எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு 100 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் கடந்த 29-ம் தேதி இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக 30-ம் தேதி நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 வரை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.
கனமழை, நிலச்சரிவுடன் சாளியாற்றில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தன. இரவு, அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.
மேலும், காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து 30-ம் தேதி காலை முதல் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5-வது நாளாக நேற்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு கர்நாடக அரசு 100 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்பதை அறிவிக்கிறேன். மேலும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு நான் உத்திரவாதம் அளித்துள்ளேன். அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கி மீண்டும் நம்பிக்கையை கொண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025