Idhayam Matrimony

உ.பி.யில் விபத்து: பஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      இந்தியா
UP 2024 08 04

Source: provided

லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

எட்டாவாவில் ஆக்ரா – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு சென்ற இரட்டை அடுக்கு பேருந்து நள்ளிரவு 12:30 மணியளவில் கார் மீது மோதியது.  ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் நேற்று முன்தினம் இரவு பேருந்தும் காரும் பயங்கரமாக மோதியது. இதனால் 6 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்துள்ளனர். 

இதன் தாக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், கார் அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து கீழே விழுந்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் உதவியுடன் சைபாய் மருத்துவ பல்கலைக் கழகத்தில் அனுமதித்தனர். 

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இறந்தவர்களில் 3 பேர் பேருந்திலும், 3 பேரும் காரில் பயணம் செய்துள்ளனர். லக்னோவில் இருந்து ஆக்ரா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. 

இதற்கிடையில், எதிர்புறத்தில் இருந்து லக்னோ நோக்கி வந்த சைலோ கார் ஒன்று எதிர்புறம் வந்து மோதியது. மோதல் சத்தம் அதிகமாக இருந்ததால் பஸ், கார்களில் சென்றவர்கள் அலறினர். தற்போது இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களில் காரில் பயணம் செய்த 3 பேரும், பேருந்தில் பயணம் செய்த 3 பேரும் அடங்குவர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து